உடுமலையை விட்டு வெளியேற மறுக்கும் சின்னத்தம்பி: காரணம் தெரியுமா?

Must read

உடுமலை:

சேவ் சின்னத்தம்பி’ என்று, சின்னத்தம்பி காட்டு யானைக்கு சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி, கும்கியாக மாற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களி லும் சின்னத்தம்பிக்கு  ஆதரவு பெருகி வருகின்றன.

காட்டுயானையான சின்னதம்பி, கோவை அருகே உள்ள சின்ன தடாகம் என்ற பகுதியில் முகாமிட்டு அந்த பகுதி மக்களை பயமுறுத்தி வந்த நிலையில், வனத்துறையினர்  மயக்க ஊசி செலுத்தி  பிடித்து, வாகனத்தில் ஏற்றி சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் கடந்து பொள்ளாச்சி டாப் சிலிப்பில் விட்டு வந்தனர். ஆனால், சின்னதம்பி ஒரே நாளில் 150 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து, மீண்டும் உடுமலைப்பேட்டை அருகே வந்து முகாமிட்டு உள்ளது.

இந்த நிலையில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றுவோம் என வனத்துறை அமைச்சர் திண்டுக் கல் சீனிவாசல் தெரிவித்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து, கும்யிக மாற்றும் எண்ணம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்தது.

கடந்த 4 நாட்களாக உடுமலை பகுதியில்  நடமாடி வரும் சின்னத்தம்பியை அங்கிருந்து விரட்ட, வனத்துறையினர் கும்கி யானையைக் கொண்டு முயற்சி செய்து வரும் நிலையில், சின்னத் தம்பியோ, கும்கியுடன் அளவளாவி  வருகிறது. கும்கி உடன் நட்பை ஏற்படுத்தி சின்னத்தம்பி கடந்த இரண்டு நாட்களாக கும்கியும் சின்னதம்பியும் நெருங்கிய நண்பர்களாக மாறி கொஞ்சி விளையாடி வருகின்றன.

இதனால், சின்னதம்பியை வனத்திற்குள் அனுப்ப முடியாமல் வனத்துறையினர் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், சின்னத்தம்பி ஏன் அந்த இடத்தை விட்டு வெளியேற மறுக்கிறது என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாக காட்டு விலங்குகள் தண்ணீர் அருந்த ஏதுவாக வனங்களில் பல பகுதிகளில் தொட்டிக ள் கட்டப்பட்டு தண்ணீர் சேமித்து வைக்கப்படுவது வழக்கம். அதுபோல தொட்டிகள் உடுமலைப்பகுதியிலும் கட்டப்பட்டு தண்ணீர் ஊற்றப்படு வருகிறது.

அதேவேளையில் அந்த பகுதிகளில் உள்ள கரும்பு ஆலைகளிலும், காட்டு விலங்குகள் ஆலை களுக்கு  புகுந்து விடாதவாறு, ஆலைக்கு  வெளியே சற்று தூரத்தில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் தொட்டிகளுக்கு, ஆலையில் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறத. மேலும் ஆலைகளில் இருந்து வெளியேறும் மொலாசஸ் எனப்படும் வெல்லப்பாகும் தண்ணீர் தொட்டிகளில் கலந்துவிடுகிறது.

மொலாசஸ் எனப்படும் வெல்லப்பாகில், ஆல்கஹாலும் உள்ளது. வெல்லப்பாகு நொதிக்க வைக்கும்போது வெளியாகும் இந்த திரவத்தில் போதையை உருவாக்கும் ஆற்றலும் உள்ளது.

இந்த தண்ணீரை குடிக்கும் காட்டு விலங்குகள் ஒருவிதமான மயக்கத்தில், தொடர்ந்து அதே தண்ணீரை பருகவே விரும்புகின்றன.

அதுபோலவே தற்போது உடுமலைப்பகுதியில் முகாமிட்டுள்ள சின்னத்தம்பியும், மொலாசஸ் மயக்கத்திலேயே அந்த பகுதியில் சுற்றி சுற்றி வருவது தெரிய வந்துள்ளது.

ஆனால், ஆலையில் இருந்து வெளியாகும் மொலாசஸை தடுக்கலாம் என்று ஆலை நிர்வாகத் திடம் வனத்துறை கோரிய நிலையில், ஆலை இயங்குவதை நிறுத்துவது என்பது இயலாத காரியம் என்றும், அதன் காரணமாக உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் மறுத்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து சின்னத்தம்பியை எப்படி அங்கிருந்து அப்புறப்படுத்துவது என்பது குறித்து வனத்துறையினர் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

More articles

Latest article