பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூன்று வாரங்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கும் சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9:30 மணிக்கும் ஒளிபரப்பாகிற பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இம்முறையும் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர்.

1. மதுமிதா (ஆடை வடிவமைப்பாளர்)
2. இசைவாணி (கானா பாடகி)
3. அபிஷேக் (விமர்சகர்)
4. ராஜு ஜெயமோகன் (சீரியல் நடிகர்)
5. பிரியங்கா தேஷ்பாண்டே (தொகுப்பாளினி)
6. அபினய் வட்டி (நடிகர்)
7. சின்னப்பொண்ணு (நாட்டுப்புற பாடகி)
8. பவானி ரெட்டி (சீரியல் நடிகை)
9. நாடியா சாங் (மலேஷியாவை சேர்ந்த மாடல் அழகி)
10. இமான் அண்ணாச்சி (நகைச்சுவை நடிகர்)
11. வருண் (நடிகர்)
12. ஐக்கி பெரி (ராப் பாடகி)
13. அக்‌ஷரா ரெட்டி (மாடல் அழகி)
14. நிரூப் நந்தகுமார் (நடிகர்)
15. நமீதா மாரிமுத்து (மாடல் அழகி)
16. சிபி சந்திரன் (மாஸ்டர் பட நடிகர்)
17. சுருதி ஜெயதேவன் (மாடல் அழகி)
18. தாமரைச் செல்வி (நாடக கலைஞர்)

நமீதா மாரிமுத்து, நாடியா, அபிஷேக் வெளியேற்றப்பட்ட்டுள்ளதால் தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் நடைபெற்ற பஞ்சதந்திரம் டாஸ்கில் வெற்றி பெறுபவர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்தால் அவர், அதில் இருந்து விடுவிக்கப்படுவார் , ஒருவேளை அவர் பெயர் நாமினேஷனில் இல்லை என்றால் அவர் விருப்பப்படும் நபரை சேவ் செய்து கொள்ளலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

நாணயங்கள் வைத்திருக்கும் ஐந்து பேரை அழைத்த பிக் பாஸ் தங்கள் நாணயத்தை பயன்படுத்தி மதுவிற்கு பதிலாக நீங்கள் ஐவரில் ஒருவர் தலைவராக மாறலாம் என்றார். ஆனால் அனைவரும் மது தலைவராக இருக்க விரும்புவதாக தெரிவித்த நிலையில் அடுத்த வாரம் நாணயத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதில் பாவனி, அபினய், பிரியங்கா, அக்ஷரா, வருண், ஸ்ருதி, இசைவாணி, இமான் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

முதல் ப்ரோமோவில், ”நேரடியாக பாயிண்டுக்கே வந்துடுறேன். இதிலிருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார், அது யாருன்னு நீங்களே புரிஞ்சிக்க முடியும்ன்னு நினைக்கிறேன். வீட்டு ஞாபகம் வந்து அழுதவங்கள நாம பாத்துருக்கோம். ஆனா ஸ்நாக்ஸ் ஞாபகம் வந்து அழுத ஒருத்தர் இருக்கார்” என்று கமல் சொன்னதும் பிரியங்கா எழுந்து நிற்கிறார். ”இருங்க கார்டுல என்ன வந்திருக்குன்னு பாப்போம்” என்றவாறு, “பிரியங்கா இஸ் சேஃப்” என்றதும் ஆனந்தத்தில் கண்கலங்குகிறார் பிரியங்கா.

இரண்டாவது ப்ரோமோவில், கொடுக்கப்பட்டுள்ள 7 பட்டங்களை ஒவ்வொருவரும் 7 பேருக்கு கொடுக்க வேண்டும். அப்போது குழப்பமானவர் பட்டத்தை அக்‌ஷராவுக்கு கொடுக்கிறார் பிரியங்கா. அடுத்தவர் மனதை புண்படுத்துபவர் பட்டத்தை பிரியங்காவிற்கு கொடுக்கிறார் அக்‌ஷரா. இதைத் தொடர்ந்து பொய்யானவர் என்ற பட்டத்தை அக்‌ஷராவுக்கு கொடுக்கிறார் நிரூப்.

மூன்றாவது ப்ரோமோவில் ’உடை பற்றிய நிறைய கருத்துக்கள் இங்கே வலம் வந்துச்சு. சிபி சொல்றதுக்கு முன்னாடி, தாமரை தான் அடக்கம்ங்கற வார்த்தையை உபயோகிச்சது. ஏன் பிடிக்கல’ என தாமரையிடம் கேட்கிறார் கமல். அதற்கு, ‘இந்த மாதிரியெல்லாம் நான் பாத்ததே இல்ல சார். சினிமாவுல தான் பாத்துருக்கேன்’ என தாமரை சொல்ல, ’இதனால உங்களுக்கு எந்த பலனும் இல்ல. இது ஒரு தன்மான கோபம் கூட கிடையாது. ஒரு குழப்பத்துல வர்ற கோபம்’ என்கிறார் கமல்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் பின்னணி பாடகி சின்னப்பொண்ணு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மற்றவர்களை விட குறைந்த வாக்குகள் பெற்ற காரணத்தினால் அவர் பிக் பாஸ் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.