பீஜிங்:
உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸை பரப்பிய சீனா, தற்போது வைரஸ் பரவலில் இருந்து விடுதலையாகி தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் அங்கு பள்ளிக் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு வித்தியாசமான யுனிபார்ம் வழங்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தலைநகர் ஹோங்சூவில்தான் பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இங்கு பள்ளிக் குழந்தைகளுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாத வகையில், சமூக விலகள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதுடன், தலையில், வித்தியாசமான முறையிலான கேப் வைக்கப்பட்டு உள்ளது.
குறைந்த எடையிலான அட்டையிலான கேப் தயாரிக்கப்பட்டு, அது குழந்தைகளின் தலையில் அணியப்பட்டுள்ளது. இதனால், சமூக விலகல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதுபேல மற்றொரு பள்ளியில் பள்ளிக்குழந்தைகள் மாஸ்க் அணிந்திருப்பதுடன், முகத்தை மூடும் வகையிலான கவசங்கள் அணிந்துள்ளனர்.