தராபாத்

ந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் செயற்கையாக சீன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மாம்பழங்கள் பெருமளவில் உற்பத்தி ஆகி வருகின்றன.   இந்த பழங்களை விரைவாக பழுக்க வைக்க பல செயற்கை முறைகள் கையாளப்பட்டு வருகின்றன.    முன்பு இதற்காக மாங்காய்கள் இடையே கால்சியம் கார்பைட் கற்கள் வைக்கப்பட்டு வந்தன.    இவ்வாறு பழுக்க வைக்கும் பழங்கள் உடல்நலத்துக்கு கேடு என்பதால் அந்த முறை முழுமையாக தடை செய்யப் பட்டுள்ளது.

தற்போது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள மாம்பழச் சந்தைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.   அப்போது மாங்காய் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனப் பொருள் அடங்கிய சாஷே வைக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   ஒவ்வொரு பெட்டியிலும் ஆறு முதல் எட்டு ரசாயன சாஷெக்கள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சாஷேவின் உள்ளே வைக்கப்பட்டுள்ள ரசாயனப் பொருள் எதிலின் வாயுவை வெளியேற்றும்.   இந்த சாஷேவில் அமைக்கப்பட்டுள்ள மிகச் சிறிய துளையின் மூலம் வெளிவரும் இந்த எதிலின் வாயு மாங்காய்களை விரைவாக செயற்கை முறையில் பழுக்க வைக்கும்.    இந்த எதிலின் வெளியேற்றும் ரசாயன சாஷேக்கள் தடை செய்யப்பட்டவைகள் ஆகும்.

இது குறித்து மாம்பழ வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமத் அபித், ”தற்போது மாம்பழ சீசன் என்பதால் நிறைய மாங்காய்கள் சந்தைக்கு வருகின்றன.   அவைகளை இயற்கையாக  பழுக்க வைக்க போதுமான இட வசதிகள் கிடையாது.   மேலும் அன்றன்று வரும் மாங்காய்கள் அதே நாட்களில் டில்லி போன்ற நெடுந்தொலைவு உள்ள நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

அவ்வளவு மாங்காய்களை நாங்கள் எவ்வளவு நாட்கள் வைத்திருக்க முடியும்?  உடனடியாக அனுப்பவில்லை எனில் எங்கள் வியாபாரம் பாழாகும்.   மேலும் இந்த ரசாயன சாஷேக்கள் மும்பையில் உள்ள சுங்கத் துறை அனுமத்தித்த பிறகே விற்பனை செய்யப்படுகின்றன.   இவை அபாயகரமானவை என்றால் அங்கேயே தடை செய்திருக்கலாமே.   அவ்வாறு செய்யாமல் தற்போது அரசு எங்களைக் குறை கூறி வருகிறது”   எனக் கூறி உள்ளார்.