பீஜிங்

தைவானுக்கு உதவும் அமெரிக்காவுக்கு எதிராக தைவான் மீது சீனா தாக்குதல் நடத்த வேண்டும் என சீன செய்தித் தாள் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.

சீனாவின் ஒரு பகுதியாக விளங்குவது தைவான் பகுதி ஆகும்.   தைவான் தன்னைத் தானே தனி அரசாக அறிவித்துக்க் கொண்டு தானே ஆட்சி செய்து வருகிறது.   இது சீனாவுக்கு கடும் பிரச்னையாக உள்ளது.   புதன் கிழமை அன்று தைவான் மீது பறந்த சீன போர் விமானம் தைவானின் போர் விமானத்தால் அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

சீனாவின் பொருட்களுக்கு அமெரிக்கா தற்போது இறக்குமதி வரிகளை உயர்த்தியதால் சீனாவின் அமெரிக்க வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.   மேலும் தைவான் பகுதியில் அமைதியை நிலை நாட்ட அமெரிக்கா தனது ராணுவத்தை அனுப்ப உத்தேசித்துள்ளது.   அத்துடன் வட கொரியாவுடனும் பேச்சு வார்த்தை நடத்தி அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.   இவை எல்லாம் சீனாவுக்குள் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

அதையொட்டி தைவான் சீனாவை சேர்ந்தது எனவும் அதை பிரிப்பவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க உள்ளதாகவும் சீன அதிபர் ஜி ஜிம்பிங் தெரிவித்துள்ளார்.   அத்துடன் தைவானுக்கு உதவி புரிவதற்காக அமெரிக்காவுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சீனாவின் செய்தித்தாள் ஒன்று சீன அரசு உடனடியாக தைவான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி அந்த பகுதியை மீண்டும் சீனாவுடன் இணைக்க வேண்டும் எனவும் இதன் மூலம் அமெரிக்க தலையீட்டூக்கு சீனா பதில் அளிக்க வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளது.