பீஜிங்: அமெரிக்காவை உளவு பார்த்த சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுபோல மேலும் பல உளவு பலூன்கள் மூலம் 5 கண்டங்கள், இந்தியா உள்பட பல நாடுகளை பல ஆண்டுகளாக வேவு பார்த்த வந்துள்ளதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளன. இது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன பலூனைப் போலவே, பல பலூன்கள் மூலம் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சீனா உளவு பார்த்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு கட்டடங்களுக்கு மேலே சீன ராட்சத பலூன் கடந்த வாரத்தில் பறந்தது. அது கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதன் மூலம் சீனாவிற்கு என்ன மாதிரியான உளவு தகவல்கள், புகைப்படங்கள் அனுப்பப்பட்டன என்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.
சீனாவின் உளவு பலூன் இது என்று அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. முதலில் வெள்ளை நிறத்தில் எதோ பறக்கிறது என்று மட்டுமே கூறப்பட்டது. காரணம் பயணிகள் விமானம் பறக்கும் உயரம், போர் விமானம் பறக்கும் உயரத்திற்கும் அதிகமாக 30 கிமீ உயரத்திற்கு அருகே இந்த பலூன்கள் பறந்து கொண்டு இருந்தன. பலூனில் கீழே சென்சார்கள் இருப்பதும், கேமரா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அதில் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாதனங்கை அனைத்தும் சோலார் பேனல்கள் உதவியுடன் இயங்கி வந்துள்ளன. பெரிய ராட்சச சோலார் பேனல்கள் பலூனில் பொருத்தப்பட்டு ஹீலியம் வாயு உதவியுடன் வானில் பறந்து வந்துள்ளன.
அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுக்கு மேலே இவை பறந்ததால், அமெரிக்கா அதை கண்காணிக்கத் தொடங்கியது. முதலில் இதை சீனா தங்களுடைய பலூன் இல்லை என்றது. எங்களுக்கும் இதற்கு தொடர்பு கிடையாது என்று சீனா கூறி வந்தது. அதன்பின் இது எங்களுடைய பலூன்தான். வானிலைகக்காக பறக்க விடப்படும் பலூன். வானிலையை கணிப்பது மட்டுமே இதன் வேலை. ஆனால் இதை பற்றி தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்று கூறியது. மேலும், அதீத காற்று காரணமாக அமெரிக்காவின் வான் எல்லைக்குள் இது தவறுதலாக நுழைந்துவிட்டது என்று சீனா விளக்கம் அளித்தது.
ஆனால் இதை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கா அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. அட்லாண்டிக் கடலுக்கு மேலே சென்ற பின் அமெரிக்க போர் விமானமன் எப் 22 விமானங்கள் 3 இதை சுற்றி பறந்து சுட்டு வீழ்த்தின. கிழக்கு கடல் பகுதியில் இந்த பலூன் வீழ்த்தப்பட்டது. இந்த பலூனின் பாகங்கள் தெற்கு கரோலினாவில் இருக்கும் மைர்ட்டல் கடல் பகுதியில் இதன் பாகங்கள் விழுந்துள்ளன.
அமெரிக்க கடலோர பாதுகாப்பு படை இந்த பாகங்களை மீட்டு உள்ளது. இந்த பாகங்களை மீட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பாகங்கள் இதுவரை 4920 அடி நீளத்திற்கு இருந்துள்ளது. 1500 மீட்டர் அளவு கொண்டதாக இருந்துள்ளது. இது கிடைமட்ட அளவு. அதுவே பலூன் கோளமாக இருக்கும் நிலையில் இதன் அளவு 200 அடியாக இருக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. அதாவது 200 அடி உயரம் கொண்ட பலூன் விண்ணில் பறந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. அதோடு இதில் இருக்கும் பாகங்கள் எல்லாம் ஒரு பிரைவேட் ஜெட் அளவிற்கு அதிக எடை கொண்டதாகவும், பலூன் ஒரு குட்டி உளவு விமானத்தை தூக்கி சென்றது போல தூக்கி சென்றதாகவும் அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது.
அதன் புகைப்படங்களை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. மேலும் அதில் பலூனின் உள்ளே இருந்த சாதனங்களை ஆழ்கடல் நீர்மூழ்கி வீரர்கள் தொடர்ந்து தேடி வருகின்றனர். அங்குலம் அங்குலமாக தேடி வரும் நீர்மூழ்கி வீரர்கள், சீன பலூனில் இருந்த கருவிகள் ஒரு ஜெட் விமானம் அளவுக்கு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
சீனா இதுபோன்ற உளவு பலூன்கள் மூலம், பல ஆண்டுகளாக ஜப்பான், இந்தியா, வியட்நாம், தைவான் நாடுகளை சீனா தனது பலூன் மூலம் உளவு பார்த்திருக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் வெண்டி ஷெர்மன் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.