வாஷிங்டன்:

சீனாவின் கொரோனா தொடர்பான புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மையற்றவை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. அங்கு மக்கள் கொத்து கொத்தாக மரணமடைந்து வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 6 மாத குழந்தை உள்பட 884 பேர் மரணத்தை தழுவி உள்ளனர்.

இந்த நிலையில், வாஷிங்டனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர்,  கொரோனாவால்  சீனாவை விட அமெரிக்காவில் பலி எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறதே என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்தவர்,  அது தவறான செய்தி என்று மறுப்பு தெரிவித்தவர், சீனா வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்ப தொடர்பான தகவல்கள் உண்மைதானா என்பது யாருக்கு தெரியும்.

இந்த வைரஸ் பரவல் குறித்த தகவல்களை சீனா ஆரம்பம் முதலே மறைத்து வந்ததாக குற்றம் சாட்டியவர்,  அமெரிக்க உளவுத்துறையும் சீனாவின் புள்ளிவிவரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியதையும் நினைவு கூர்ந்தார்.

சீனாவுடன் தற்போதுவரை நல்லுறவு நீடித்து வரும் நிலையில்,  கொரோனா வைரஸ் தொற்று விஷயத்தில் சீனா நம்பகத்தன்மையற்ற நாடு.

இவ்வாறு அவர் கூறினார்.