இந்தியாவில், குழந்தைகள் தினசரி பல்வேறு நிலப்பகுதி வழியாகப் பல மைல்கள் நடந்து பள்ளியை அடைகின்றனர் என்பது நமக்குத் தெரிந்த ஒன்றே. நாம் அவர்களுக்குப் பரிதாபப்படும் போது, நிலைமை மெதுவாக ஆனால் நிச்சயமாக மாறிவருகிறது. பள்ளிகள் தொலைதூர பகுதிகளில் அமைக்கப்பட்டு பல மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்னும் சில குழந்தைகள் தங்களது கல்வி தாகத்தை தணிக்க தினமும் நீண்ட தூரம் நடந்தோ அல்லது சைக்கிளிலோ பள்ளிக்குச் செல்கின்றனர்.
school featured
தினசரி பல மைல்கள் நடக்கும் இந்தக் குழந்தைகள் விட மிக மோசமான நிலையில் இன்னும் சில குழந்தைகள் இருக்கிறார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா….? உண்மையில் தினமும் சில குழந்தைகள் மலையேறி இறங்கி அவர்களது பள்ளிக்குச் சென்று வருகிறார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா?
Temple2
பள்ளிக்குச் செல்லத் தினமும் 2600 அடி மலையை ஏறிக் கடக்கும் கட்டாயத்தில் இந்தக் குழந்தைகள் உள்ளனர்!
School-2
ஆம் இது உண்மை தான். சீனாவில் உள்ள அத்துலர்களின் கிராமம், தொலைதூரத்தில், மக்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள, மலையிலிருந்து கீழே இறங்கி வரும் பாதையைத் தவிர வேறு எந்தவொரு சாலை வழிகளோ வெளியுலக தொடர்போ இல்லாத ஒரு சிறிய கிராமம். இந்தக் கிராமம் 2,624 அடி உயர பாறையின் உச்சியில் அமைந்துள்ளது. இது சீனாவில் ‘கிளிஃப் கிராமம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கிராமம் மிகத் தொலைவில் இருப்பதாலும் அங்கு மக்கள் எண்ணிக்கை அதிகமாக இல்லாததாலும், அரசாங்கம் எந்த வகையான திட்டங்களையும் போக்குவரத்து வசதிகளையும் கொண்டு வர முற்படவில்லை.
School-Main
இந்தக் கிராமத்திற்கு பயணம் செய்ய ஒரே வழி, செங்குத்தான மலையின் பக்கத்தில் தொங்கும் கொடியின் ஏணிகள் தான். சில பகுதிகளில், அந்த கொடிகளும் இருக்காது, அங்கே மக்கள் காலடி தடங்களை கண்டுபிடித்துச் செல்வர்.
 
School-10
குழந்தைகள் 2600 அடி பாறையைத் தினமும் ஏறுவதை கற்பனை செய்து பாருங்கள்! இந்தக் கிராமக் குழந்தைகள் செல்லும் பள்ளி இந்த மலையின் கீழே அமைந்துள்ளது. 6 வயது கூட நிரம்பப் பெறாத இன்னும் சரியான சமநிலையாக நடக்க கற்று கொள்ளாத இந்தச் சிறிய குழந்தைகள் தினமும் இந்த ஆபத்தான பயணத்தைச் செய்கின்றனர். கொடூரமான இந்த நிலைமையால் பள்ளிக்குச் சென்று வரும்போது பல மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில், குறைந்தது 8 மக்களாவது மலையிலிருந்து விழுந்து இறந்துள்ளனர். மழை மற்றும் பனி காலத்தின் போது பள்ளிக்குச் சென்று வருவது இன்னும் மோசமாக இருக்கும். அந்த ஏணி நேராகவும் செங்குத்தாகவும் உள்ளதால் முற்றிலும் பாதுகாப்பற்றது. மேலும், அது உறுதியானதோ அல்லது உலோகத்தால் ஆனதோ அல்ல இயற்கையான கொடியினால் உருவாகிய ஏணிகள்.
School-9
வெறும் ஒரு வழி பயணத்திற்கே குழந்தைகளுக்கு 2 மணி நேரம் தேவைப்படுகிறது மற்றும் எல்லா நேரங்களிலும் பெரியவர்கள் அவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும். குறைந்தது 3 பெரியவர்களாவது குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு அவர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். பல முறை, குழந்தைகளிடையில் நின்று இடைவேளை எடுக்க வேண்டும் ஏனென்றால் தொடர்ச்சியாக ஏறுவது அவர்களுக்குக் கடினமா இருக்கும். பெரியவர்களுக்குக் குறைந்த நேரம் தான் தேவைப்படும்.
School-8
குழந்தைகளுக்கு ஏறி இறங்குவது திகிலாக இருக்கும் அதனால் அவர்கள் தொடர்ந்து இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், குழந்தைகள் பள்ளிக்குப் செல்வதால், அவர்கள் அனைத்து பள்ளி பொருட்களுடன் கனமான பள்ளி பைகளையும், ஏறி இறங்குவதால் ஏற்படும் வறட்சியைத் தவிர்க்கத் தண்ணீர் பாட்டில்களும் கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய திகிலூட்டும் நிலையால், பல குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படாமல் விட்டிலேயே இருந்து வேலை செய்யச் சொல்லப்படுகின்றனர்.
School-7
 
இந்தக் கிராமத்தில் இருப்போருக்கு அதுவே போதுமானது அதாவது அந்த மக்கள் பள்ளி மற்றும் வேறுசில தேவைகளுக்கு மட்டுமே சில நேரங்களில் பயணம் செய்வர் அதைத் தவிர அவர்கள் அதிகமாக வெளியே போக தேவையில்லை. அவர்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள நிலம் மிகவும் வளமானது ஆகையால் அந்த உள்ளூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.
 
School-6
அரசாங்கம் அவர்களுக்கு ஆடுகள் மற்றும் பிற விலங்குகள் வடிவில் மானியம் வழங்கியுள்ளது, ஆனால் சாலை அமைக்க உள்ளூர் மக்களின் நிலையான தொடர்ந்த கோரிக்கைகளுக்குப் பின்னரும் கட்டுமான செலவு அதிகமாக உள்ளதால் அரசாங்கம் செயல்படாமல் உள்ளது (60 மில்லியன் யுவான் – 60 கோடி ரூபாய்க்கு மேல்) மேலும் இது ஒரு சிறந்த முதலீடாக இருக்கும் என்று அரசாங்கம் நினைக்கவில்லை.
School-5 School-4
சாஜூ அலுவலக செயலாளர் ஜி கே ஜின் சாங் படி, “முக்கிய பிரச்சினை என்னவென்றால் எங்களால் மிக எளிதில் கிராம மக்களை அருகில் உள்ள நகரத்திற்கு மாற்ற முடியும் ஆனால் அவர்களது விவசாய நிலம் இல்லாமல் அவர்களுக்கு வேலையில்லை. அவர்களிடன் நல்ல நில வளங்கள் உள்ளது அதனால் அதிக பயிர் மகசூல் கிடைக்கிறது.
School-3
கிராமத்திற்கு ஒரு சாலை அமைக்க 60 மில்லியன் யுவான் (£ 6.2 மில்லியன்) செலவாகும். ஆனால் அது பயனுள்ள செலவு இல்லை ஏனெனில் அங்குள்ள மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ”
இதைக் கேட்க மிகவும் வருத்தமாக உள்ளது. இத்தகைய தடங்கல்களை மீறிக் கல்வி பயிலும் அந்தக் கிராம குழந்தைகளின் தைரியத்திற்கும் உறுதிக்கும் தலை வணங்குவோம்.
காணொளி காண்க:
https://www.youtube.com/watch?v=PVHve4NwhEs