ஷாங்காய்

சீன உச்சநீதிமன்றம் வாரத்துக்கு ஆறு நாட்கள் 12 மணி நேரப் பணி புரிவது சட்டவிரோதம் என தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள நிறுவனங்களில் 12 மணி நேரம் பணி அளிக்கப்படுகிறது.  குறிப்பாகப் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இவ்வாறு இயங்கி வருகின்றன.  இங்குள்ள பணியாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பணி புரிகின்றனர்.

இவர்களுக்கு வாரத்தில் 6 நாட்கள் பணி அளிக்கப்படுகின்றது.   இதை ஆங்கிலத்தில் 996 ஓவர் டைம் எனக் கூறுகின்றனர்.   அதாவது வார இறுதி நாட்கள் மற்றும் அதிகப்படியான பணிகளுக்கு ஓவர் டை ம் கணக்கிடப்பட்டு ஊதியம் அளிக்கப்படுகின்றன.  இதனால் பலருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையொட்டி சீன உச்சநீதிமன்றம் மற்ரும் மனித வள அமைச்சகம் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதில் இவ்வாறு வாரத்துக்கு ஆறு நாட்கள் 12 மணி நேரப் பணி அளிப்பது சட்டவிரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதை பல நிறுவனங்கள் தற்போது ஒப்புக் கொண்டுள்ளன.

பிரபல சீன நிறுவனமான டிக்டாக் நிறுவன உரிமையாளர் இன்று தாங்கள் இனி வார இறுதி ஓவர்டைம் மற்றும் 12 மணி நேரப் பணியை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான  சிலிகன் வேலி நிறுவனம் உள்ளிட்ட நிருவனங்கள் இது குறித்து அமெரிக்காவில் உள்ள தங்கள் தலைமையகத்த்தின் உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்