பீஜிங்

ணு ஆயுதங்களை கை விடப் போவதாக சீன அதிபரிடம் வட கொரிய தலைவர் வாக்களித்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாரக உள்ளதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உங் தெரிவித்ததை அடுத்து அவர் சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.   அதிகாரபூர்வமற்ற இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர் சீனப் பிரதமர் ஜி ஜின்பிங் உடன் சந்திப்பு நிகழ்த்தியதாக தற்போது சீன அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த சந்திப்பின் போது அமெரிக்கா – வட கொரியா பேச்சு வார்த்தை குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.     வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பது பற்றியும் அதற்கு ஆதரவு அளித்து வரும் சீனாவின் தற்போதைய நிலை குறித்தும் இரு தலைவர்களும் பேசி உள்ளனர்.

இது குறித்து சீன அரசின் வெளியுறவு அமைச்சரகம், “கொரிய தீபகற்பத்தில் தற்போது நிகழும் சூழல் குறித்து சீன அதிபர் தனது அக்கறையை தெரிவித்துள்ளார்.    அந்தப் பகுதியில் அமைதி நிலவ அணு ஆயுதங்களை கைவிட வேண்டியது அவசியம் என வட கொரிய அதிபருக்கு அவர் எடுத்துரைத்தார்.   அதை ஏற்றுக் கொண்ட வட கொரிய அதிபர் அணு ஆயுத சோதனைகளை கைவிடப் போவதாக சீன அதிபருக்கு உறுதி அளித்துள்ளார்”  என தெரிவித்துள்ளது.

இந்த தகவலை வட கொரிய அரசின் வெளி நாட்டு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.