சீனா,
கட்டுமான பணியின்போது மின் உற்பத்தி நிலையம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
சீனாவின் ஜியாங்சி மாகாணம், பெங்செங்கில் மின்உற்பத்தி நிலையத்துக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை கட்டுமானப் பணிகள் தொடங்கிய சிறிது நேரத்தில், அதாவது காலை இந்திய நேரப்படி 7 மணி அளவில் வேலையின்போது, அருகில் இருந்த அதிக எடை கொண்ட கான்கிரீட் ஸ்லாப்புகள், இரும்பு கம்பிகள் திடீரென சரிந்து விழுந்தன.

இதனால், ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பலரது உடல் உறுப்புகள் சிதைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் பலர் ஆபத்தான் நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது

ஏற்கனவே கடந்த வருடம் தினாஞ்சன் என்ற இடத்தில் உள்ள கெமிக்கல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 170 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel