தென்கொரிய நாட்டின் பெண் அதிபர் பார்க் குவென் ஹையின் அலுவலகம் ஆண்களுக்கான விறைப்பு தன்மையை தூண்டும் வயாகரா மாத்திரைகளை நூற்றுக்கணக்கில் வாங்கி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளது.

southkorea_park

திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்து வருபவர் பார்க் குவென் ஹை. இந்த மாத்திரைகளை அவர் அலுவலகம் வாங்கியதைக் குறித்து பலரும் பலவிதமாக பேச அதற்கு முடிவுகட்டும் வகையில் இந்த மாத்திரைகளை வாங்கியது ஏன் என்ற கேள்விக்கு அதிபர் அலுவகலம் பதில் அளித்துள்ளது. அதிபர் சமீபகாலமாக எத்தியோபியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உயர்ந்த மலைகளுள்ள இடங்களுக்கு பயணிப்பவர்களுக்கு மவுண்டன் சிக்னெஸ் என்ற பாதிப்பு வரும். அந்த நோய்க்கு சிறந்த மருந்து வயாகரா! எனவே அதை நாங்கள் வாங்கினோம் என்று பதிலளித்துள்ளது.
இதற்கு முன்பு இதே போல மனித தொப்புள்கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறு கொண்ட மருந்தை அதிபர் அலுவலகம் வாங்கி சர்ச்சையில் சிக்கியது. அப்போது அதற்கு அவர்கள் சொன்ன காரணம் அதிபரின் பாடிகார்டுகளுக்காக வாங்கியது என்பதாகும். அந்த மருந்து ஒருவருக்கு வயதாகாமல் தடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்கொரிய மக்களை பொறுத்தவரை தங்கள் அதிபர் ஒரு இயற்கைக்கு மாறான வித்தியாசமான உலகத்தில் வாழ்வதாக கூறுகின்றனர். அதிபர் பார்க்குக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை இவரது நெருங்கிய தோழி சோய் சூன் சில். இவர் ஒரு மர்மமாக செயல்படும் மதக்குழு ஒன்றின் தலைவருடைய மகளாவார். சோய் சூன் சில்லின் ஆதிக்கம் அதிபரின் அரசியல் முடிவுகளில் தலையிடுவது வரை பரவியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் வலம் வருகின்றன.
அதிபர் பார்க்கின் செயல்பாடுகள் தென்கொரிய அரசியலில் சமீபகாலமாக தொடர்ந்து பூகம்பத்தை கிளப்பிவருவது குறிப்பிடத்தக்கது.