சீன செயற்கை நுண்ணறிவு தொடக்க நிறுவனமான DeepSeek சமீபத்தில் வெளியிட்ட AI தொழில்நுட்ப செயலிக்கு மத்திய நிதியமைச்சகம் தடை விதித்துள்ளதை அடுத்து, அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

DeepSeek AI தொழில்நுட்பத்தில் பகிரப்படும் தரவுகள் சீன அரசாங்கத்திற்கு கசிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து அரசு ஊழியர்களுக்கு மத்திய நிதி அமைச்சகம் இந்த கட்டுப்பாட்டை விதித்தது.

அமெரிக்காவின் சாட்ஜிபிடி மற்றும் சீனாவின் டீப் சீக் ஏஐ செயலிகளை அலுவலக கணினிகளில் பதிவிறக்கம் செய்ய தடை விதிக்கப்பட்டது.

நிதியமைச்சக ஊழியர்கள் எக்காரணம் கொண்டும் சாட்ஜிபிடி, டீப் சீக் ஏஐ செயலிகளை பதிவிறக்கம் செய்ய கூடாது என அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் மத்திய நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், மத்திய அரசின் முடிவால் வர்த்தகம் அரசியலாக்கப்படுவதாக கூறியுள்ளார்.

அரசு ஊழியர்கள் ChatGPT மற்றும் Deepseek போன்ற AI-களை பயன்படுத்த வேண்டாம்… மத்திய அரசு அறிவுறுத்தல்…