சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான ஜி சாங்வோவை விட தற்போது லி டாக்ங்கிற்கு ரசிகர்கள் மிக அதிகமாகவுள்ளனர்.

லீ டாங்க் பாத்திரத்தில் நடிக்கும் வூ காங் Li Dakang/ Wu Gang

“நான் வளர்ச்சியை விரும்புகிறேன், வேகத்தை விரும்புகிறேன், நான் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விரும்புகிறேன்” என்று அவர் சமீபத்தில் கூறியிருந்தார். “ஆனால் அது  நவீன ஜி.டி.பி ஆக இருக்க வேண்டும், சுற்றுச் சூழல்  மாசுபடாமல், மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வேண்டும்” என்றார். கடந்த மாதத்தில் இருந்து பத்தாயிரக்கணக்கான மக்கள் இவர் தன் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயலுவதைக் கவனித்து வருகின்றனர். மக்கள் அவரை தங்கள் கனவு நாயகனாக ஏற்றுக் கொண்டு அவரது புகைப்படங்களை அவரது வசனங்களுடன் பகிர்ந்துக் கொண்டு அவரை ஊக்கப்படுத்துகிறார்கள். அவருடைய கொள்கைகள் “ஜிடிபி பாடல்” எனும்  ஒரு இசை அஞ்சலியாக வெளியிடப் பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாய் பரவிவருகின்றது.

லீ டாங்க் ஒரு நிஜமான மனிதர் அல்ல. அவர் கம்யூனிஸ்ட் தலைவரும் இல்லை. கடந்த மார்ச் மாதம் துவங்கி 55 பாகங்களாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டு வரும் ஊழல் குறித்த ஒரு மெகா சீரியலின் (இன் தெ நேம் ஆஃப் பீபுல் (மக்களின் பெயரில்)) கதாபாத்திரம் லீ டாங்க். அந்த தொடரில், சீனாவில் நிலவி வரும் பொருளாதாரப் பிரச்சனைகள் மிகச்சிறப்பாகக் காட்சியமைக்கப் பட்டுள்ள விதம் மக்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வையும் கலந்துரையாடல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் கடுமையான சென்சார் போர்ட் இதனை அனுமதித்துள்ளது ஆச்சரியமளிக்கின்றது. இந்தத் தொடர் குறித்து மேற்குறிப்பிட்டது போல் மக்கள் ஆரவாரத்துடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்தத் தொடரைப் பார்த்து கண்ணீர் விட்டேன்” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இந்தத் தொடரில் வரும் சம்பவங்கள் உண்மையைப் பிரதிபலிக்கின்றன. ஊழல் நம் நாட்டின் வளர்ச்சியை பிரதிபலிக்கின்றது. கடந்த 2002ம் ஆண்டிற்கு பிறகு ஊழல் குறித்த தொடர்கள், அரசு அதிகாரிகளின் நெருக்குதலால், தொலைக்காட்சியில் இருந்து மறையத்துவங்கின. ஆனால், 2012ம் ஆண்டு சீ ஜின்பிங்க் அதிபராக பதவியேற்றப் பின் ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் பல எடுத்து வருகின்றார். அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் விதமாக இந்த  மெகாத்தொடர் வெளிவந்துள்ளது எனலாம்.

சீன மீடியாக்கள் கையாளச் சிரமப் படும் பொருளாதார தலைப்புகளை ஒட்டி இந்தத் தொடரின் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. ஒரு தொழிற்சாலை திவாலானதால் அதன் நிறுவன பங்குகள் துடைத்தெறியப் படுவதை அடுத்து அதன்  தொழிலாளர்கள் காவல்துறையுடன்  மோதலில் ஈடுபடுகின்றனர்.   ஒரு மூத்த தலைவரின் மகன்  தனது குடும்பத்தினருக்கு உள்ளூர் நிறுவனங்களில் பெரும் பங்குகளை சேகரிக்கின்றான். ஒரு சிறிய வணிக உரிமையாளர்  அதிகக் கடன்தொல்லையில் சிக்குகின்றார்.  உள்ளூர் வங்கியாளர்கள் கடன் திருப்பிச் செலுத்தும்  காலத்தை அதிகரிக்க “ஆலோசனை கட்டணங்கள்” வாங்கி பணத்தை சுருட்டுகின்றனர்.  இது சீனாவில் நிலவி வரும் உண்மைநிலையை யதார்த்தமாகச் சித்தரித்துள்ளது சீன நாட்டின் வங்கிகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பின் மிக மூத்த அதிகாரியான குவோ சூகிங் (Guo Shuqing) சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது இந்த  நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி வங்கிகளை எச்சரித்தார் என சீன பத்திரிகை வெளியிட்ட  அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தத் தொடரின் முதல் அத்தியாயத்திலேயே, ஒரு புலனாய்வு அதிகாரி ஒரு பண்ணை வீட்டில் அதிரடியாய் நுழைந்து பெரும் ஊழல் பணத்தை கைப்பற்றுகின்றார். அந்த பணத்தின் உரிமையாளரும், அரசு அதிகாரியுமானவர் உயிர்பிச்சை கேட்கின்றார். மிகவும் உறுதியான பொருளாதாரக் கதையின் சாரம்சம், “ லி-யின் வளர்ச்சி குறித்த லட்சியமும் இந்த குறுகிய லட்சியத்தினால் விளையும் பிரச்சினைகளை  லீ, மனம் தளராமல் எவ்வாறு முயற்சி செய்கின்றார் என்பதாகும்.

லூ யி யாக நடிக்கும் ஹோ லியான்பிங்.. Hou Liangping / Lu Yi

லீ நேர்மையாளனாக இருந்தாலும் தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை கண்டும் காணாமல் இருப்பார். ஒரு இளம் அதிகாரியாக   ஒரு கிராமச் சாலையை உருவாக்க ஒரு வெறித்தனமான நடவடிக்கையால் கிராமத் தலைவர்  மரணமடைய  வழிவகுக்கிறது. பின்னாளில் ஒரு தொழிற்சாலையை புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்க முயலும் போது ஏற்படும் போராட்டத்தால் சுமார்  30 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைய நேரிடுகின்றது.

தற்போது சீன அரசு கலாச்சாரம், சுற்றுச் சூழல் என கவனம் செலுத்தி பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்த தவறிவரும் வேளையில், சீனமக்கள், நேர்மையான அதிகாரிகள் தங்களின் ஊழல் ஒழிப்பு அதிரடி நடவடிக்கையில் சில தவறுகள் ஏற்பட்டாலும், நேர்மையாய், வேகமான உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க உழைக்கும் அதிகாரிகளை ஆதரிக்கவே செய்கின்றனர் என்பதே தற்போது தொலைக்காட்சி நாயகனுக்கு அளித்துவரும் ஆதரவில் இருந்து நமக்கு புரியவருகின்றது.

மக்கள் நலன் மீது அக்கறைக் கொண்ட நிஜத் தலைவர்களின் பற்றாக்குறை, மக்களை கற்பனைப் பாத்திரங்களின் பின்னாலும் நடிகர்களின் பின்னும் தங்களின் ஆதரவை காட்ட தூண்டியுள்ளது வருந்தத் தக்கது.