டெல்லி: எதிர்காலத்தில் விரோத நடவடிக்கைக்காக சீனா அடித்தளத்தை உருவாக்குகிறது என ராகுல்காந்தி மத்தியஅரசுக்கு  எச்சரிக்கை செய்து டிவிட் பதிவிட்டுள்ளார். மேலும், இதை புறக்கணிப்பதின் மூலம் மோடி அரசு இந்தியாவுக்கு துரோகம் செய்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்து வருகிறது, இது எதிர்காலத்தில் மோதல் நடவடிக்கைக்கான அடிதளத்தை உருவாக்கும் நடவடிக்கை என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மத்தியஅரசை  எச்சரித்துள்ளார்.

லடாக் பிரச்சினையைத் தொடர்ந்து, இந்தியா சீனா இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இரு தரப்பும் எல்லையில் துருப்புகளை குவித்த வருகின்றன. இந்த நிலையில்,  கிழக்கு லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளிலும், வடக்கு எல்லையில் இந்தியாவின் கிழக்கு ராணுவ தலைமையகம் வரையிலான எல்லைப் பகுதியிலும் சீனா படைகளின் எண்ணிக்கையை  அதிகரித்திருக்கிறது.

ஒருபுறம் சீனாவும், இந்தியாவும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து வரும் நிலையில், மற்றொருபுறம் சீனா, படைகளை குவித்து வருவது கவலையளிக்கக்கூடிய விஷயமாக கருதப்படுகிறது ஆனால், மத்தியஅரசு, எல்லையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வரு கிறோம் என கூறி வருகிறது. இந்தியாவும் படைகளின் எண்ணிக்கையையும் பிற பாதுகாப்பு கட்டமைப்புகளையும் அதிகரித்திருக்கிறது. சீனாவின் அச்சுறுத்தல்களை  எதிா்கொள்ள இந்தியா தயாாராக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் நடவடிக்கைக்கான அடிதளத்தை உருவாக்கும் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  இந்தியாவின் எல்லை பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பது எதிர்காலத்தில் மோதல் போக்கை ஏற்படுத்தும் என்றும், சீனா ஆக்கிரமிப்பு செய்திருப்பதை மறுப்பதன் மூலம் நாட்டுக்கு துரோகம் இழைக்கிறது மத்திய அரசு என்று ராகுல் கூறியுள்ளார் .

லடாக் பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி கூறியதை மேற்கோள்காட்டி ராகுல் காந்தி டிவிட் போட்டுள்ளார்.