கராச்சி:
இந்தியாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனை சீனாவுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன் அக்னி 5 என்ற ஏவுகனை சோதனையை இந்தியா வெற்றி கரமாக அரங்கேற்றியது. இது 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை அணு ஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் வல்லமை பெற்றது. இதனால் சீனாவின் வடக்கு பகுதி, ஐரோப்பாவில் சில பகுதியையும் தாக்கும் வல்லமை கொண்டதாக இது உள்ளது.
இந்த வெற்றி கரமான சோதனை சீனாவுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யுங் கூறுகையில், தெற்காசியாவில் உள்ள ஸ்திரதன்மையை இந்த சோதனை பாதிக்கும் வகையில் உள்ளது என்று இந்திய நாளிதழ் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த சோதனையில் ஐநா குழு தெரிவித்துள்ள ஒழுங்கு முறைகளை இந்தியா கடைபிடித்திருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
இது எந்த நாட்டையும் குறி வைத்து நடத்தப்பட்ட சோதனை கிடையாது. சர்வதேச அளவில் போட்டியை எதிர்கொள்ளும் நோக்கில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டது என்று இந்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விளக்கத்தில் திருப்தியடையாத சீனா, இந்த விவகாரத்தை ஐ.நா. கவனத்துக்கு கொண்டு செல்லப்போவதாக பாகிஸ்தான் நாட்டின் கராச்சி மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சீனா அறிவித்துள்ளது.