மணிலா:
நாடுவானத்தில் பறந்த போது ஹெலிகாப்டரில் இருந்து ஒருவரை தள்ளி கொலை செய்ததாகவும், ஊழல் அரசு ஊழியரை அதே போல் கொலை செய்வேன் என்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருப்பவர் ரோட்ரிகே துதர்தே. இவர் தொடர்ந்து 22 ஆண்டுகள் தவாவே நகரின் மேயராக இருந்தவர். குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதை கொள்கையாக கொண்டவர்.
அந்நாட்டில் போதைப் பொருள் கடத்தலில் சிக்கும் வெளிநட்டை சேர்ந்தவர், உள்நாட்டை சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் பாரபட்சம் இன்றி மரண தண்டனை நிறைவேற்றி வருகிறார். மேயராக இருந்துபோது பலரைக் கொலை செய்ததை அவரே ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா.வுக்கு எதிராக கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கினார். இவர் தற்போது புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
நாடு வானத்தில் பறந்த போது ஹெலிகாப்டரில் இருந்து ஒருவரை தள்ளி கொலை செய்ததாகவும், ஊழல் அரசு ஊழியரை அதே போல் கொலை செய்வேன் என்று பேசியுள்ளார். அந்நாட்டு அரசு அரசு ஊழியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் சென்று சிலரைச் சுட்டுக்கொன்றதாகவும் அவர் தற்போது தெரிவித்துள்ளார். ரோட்ரிகோ கருத்துகளைக் கொண்டு அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முடியும் என்று சில செனட்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரோட்ரிகோவின் மரண தண்டனை நடவடிக்கைக்கு ஐ.நா., சர்வதேச நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகிறது. கடுமையாக விமர்சித்தும் வருகின்றன. ஆனால் ரோட்ரிகோ யார் பேச்சையும் காது கொடுத்து கேட்காமல் மரண தண்டனை முடிவில் தீர்க்கமாக உள்ளார்.