சென்னை: கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், சுமார் 19மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும்  பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டது.

இதையொட்டி, குழந்தைகள் தங்களது புத்தக பைகளுடன் பள்ளிகளுக்கு  குதூகலகத்துடன், ஓடி வந்ததுடன், தங்களது ஆசிரியர்களையும், சக மாணாக்கர்களையுடம் கண்டு பரவசமடைந்தனர். பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் பூ, இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா என பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு  மார்ச் இறுதியில் கல்வி நிலையங்கள் முழுமையாக அடைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முழு ஆண்டு தேர்வு நடத்தாலேமேயே 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இடையில், தொற்று குறைந்ததும், இடையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக மீண்டும மூடப்ப்ட்டது.

இதையடுத்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும்,  2021 செப்டம்பர்.1-ம் தேதி முதல் 9-12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் கல்லூரிகளும் கொரோனா நெறிமுறைகளுடன் திறக்கப் பட்டது.

தொடர்ந்து இன்று முதல் (நவ.1-ஆம் தேதி)  1ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர் களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.  பள்ளிகள் திறப்பு அறிவித்ததும் மாணாக்கர்களும் பெற்றோர் களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்படி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. சென்னை உள்பட பல மாவட்டங்களில்  பல இடங்களில் மழை தூறிக்கொண்டிருந்தாலும், மாணாக்கர்களும், பெற்றோர்களும் பள்ளிகளுக்கு சந்தோஷமாக வந்தனர்.

பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு  டெம்ப்ரேச்சர் பார்க்கப்பட்டதுடன், சானிடைசரும் வழங்கி கைகள் சுத்தப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

மாணாக்கர்கள் குதூகலத்துடன் பள்ளிக்குள் வந்ததும்,  ஆசிரியர்களையும், சக மாணாக்கர்களையும் கண்டு மகிழ்ச்சியில் திளைத்தனர். பள்ளிக்கு வந்த அனைத்து மாணாக்கர்களும் ஆசிரியர்கள் இனிப்பு மற்றும் மலர் கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் அரசின் வழிகாட்டுதல்படி, வகுப்பறைக்கு 20 பேர் என அமர வைக்கப்பட்டனர்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்கு வந்துள்ள மாணாக்கர்களுக்கு சில நாட்கள் பாடங்கள் நடத்தப்படக்கூடாது என்றும், அதற்கு பதிலாக மாணவர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த இரு வாரங்கள் மாணாக்கர்களை குதூகலப்படுத்தும் வகையில், கதை, பாடல், விளையாட்டு, ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் போன்ற மனமகிழ்ச்சி செயல்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.