டெல்லி: 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1 முதல் முன்பதிவு தொடங்க உள்ளதாகவும், இணையதளம் ம்ற்றும் CoWIN app மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்றும்  மத்தியஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

நாடு முழுவதும் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  இதுவரை141 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 57 கோடியே 70 லட்சம் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு உள்ளதாகவும், இது நாட்டு மக்கள் தொகையில் 41.8% எனவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஒமிக்ரான் பரவல் தொடங்கியிருப்பதால், ஜனவரி 3ந்தேதி முதல் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவும், ஜனவரி 10ந்தேதி முதல் முன்களப்பணி யாளர்கள் மற்றும் முதியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தவும் மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

அதன்படி, நாடு முழுவதும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு ஜனவரி 1 முதல் தொடங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறுவர்களுக்காபன தடுப்பூசி செலுத்துவதற்கு https://www.cowin.gov.in/ என்ற இணைய தளத்தில் ஜனவரி 1 முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும்,  CoWIN இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்றும், அவ்வாறு பதிவு  செய்யும்போது ஆதார் கார்டு இல்லாதவர்கள் 10 ஆம் வகுப்பு ஐடி கார்டை பயன்படுத்தி தடுப்பூசிக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக,கோவின் இயங்குதளத் தலைவர் டாக்டர் ஆர்.எஸ்.சர்மா கூறியதாவது: “15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஜனவரி 1 முதல் CoWIN செயலியில் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.பதிவு செய்வதற்கு கூடுதலாக (10வது) அடையாள அட்டையைச் சேர்த்துள்ளோம் .சிலரிடம் ஆதார் அல்லது பிற அடையாளங்கள் இல்லாததால் மாணவர் அடையாள அட்டை அட்டைகள் (ஐடி கார்டுகள்)சேர்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளார்.