டில்லி

சிறார்கள் கொரோனா தடுப்பூசி  செழுத்தில் கொள்வதில் உற்சாகம் காட்டி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவலால் நாடெங்கும் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.   மேலும் இதனால் கொரோனா பரவலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதையொட்டி மத்திய அரசு கொரோனா தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்ட மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது.  தற்போது நாடெங்கும்  மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.

கடந்த 3 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் 15-18 வயதான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.  மத்திய சுதாகாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுவரை 3 கோடிக்கும் அதிகமான சிறார்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்  எனத் தனது டிவிட்டரில் பதிவு இட்டிருந்தார்.

இது குறித்து பிரதமர் மோடி, “ இந்தியா இளம் மற்றும் இளமையான நாட்டு மக்களுக்கு வழி காட்டி வருகிறது. உற்சாகத்துடன் அதிக அளவில் சிறார்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளது ஊக்கமளிக்கும் செய்தியாகும்.நாம் இந்த வேகத்தைத் தக்க வைத்துக் கொள்வோம்.

கொரோனா தடுப்பூசி போடுவதும், வைரஸ் தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றுவதும் முக்கியம்.  இந்த தொற்று நோயை எதிர்த்து நாம் அனைவரும் ஒன்றாகக் கூடி நின்று போராடுவோம்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.