
புனே:
இறந்த ஒரே மகனின் விந்தணுவை கொண்டு, வாடகை தாய் மூலம் இரட்டை பேரக்குழந்தையை பெற வைத்து சந்தோஷமடைந்துள்ளனர் பெற்றோர்கள்.
பிரதாமேஷ் என்ற புனே இளைஞர் மேல்படிப்புக்காக ஜெர்மனியில் தங்கி படித்து வந்தார். அப்போது உடல் நலம் பாதிக்கப்பட்ட அவருக்கு, தலையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. அந்த கட்டி புற்றுநோய் கட்டி என்று அறியப்பட்டதும், அவருக்கு கீமோ தெரபி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
முன்னதாக அவரிடம் இருந்து ஜெர்மணி மருத்துவமனை நிர்வாகம் விந்தணுக்களை பெற்று அதற்கான வங்கியில் பத்திரப்படுத்தியது.
இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த பிரதாமேஷின் உடல் மேலும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியா திரும்பினார். அதைத்தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தங்களது ஒரே மகன் இறந்ததை மறக்க முடியாத பெற்றோர், அவரின் விந்தணு மூலம் குழந்தை பெற முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து, தனது மகனின் குழந்தையை பார்க்க விரும்பிய பெற்றோர், தானே வாடகை தாயாக இருக்க விரும்பினார். ஆனால், அவரது கருப்பை, வயோதிகம் காரணமாக பலவீனமாக இருந்ததால், வேறு வாடகை தாயை தேடினர்.

அப்போது, வாடகைத்தாயாக செயல்பட உயிரிழந்த இளைஞரின் உறவினரான இளம்பெண் ஒருவர் முன்வந்தார்.
அதையடுத்து, ஜெர்மனி மருத்துவமனையில் பேசி, பிரதாமேஷின் விந்தணுவை இந்தியா கொண்டு வர செய்து, புனேயில் உள்ள மருத்துவமனை மூலம், தானமாக பெற்ற கருமுட்டைகளுடன் பிரதாமேஷின் விந்தணுக்களை இணைத்து, கருவாக வளர்க்கப்பட்டு, அதை வாடகைத்தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டது.
குழந்தை ஆரோக்கியமாக வளர்ந்து வந்த நிலையில் கடந்த 12ந்தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த இளம்பெண் குழந்தை பெற்றெடுத்தார். அப்போது இரண்டு குழந்தைகளை அவர் பெற்றோர்.
இது பிரதாமேஷின் பெற்றோருக்கு ஆச்சரியத்தையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தற்போது இரு குழந்தைகளையும் அந்த வயதான பெற்றோர் பராமரித்து வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]