சென்னை:
குழந்தைகள் விற்பனை விவகாரத்தை தொடர்ந்து காப்பகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார்.

காப்பகங்கள் முறையாக செயல்படுகிறதா? என ஆய்வு செய்ய வேண்டும் என்றும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை காப்பகங்களில் உள்ளவர்களின் பாதுகாப்பின் நிலை என்ன என்பதையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து 15 நாட்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் அனுமதியின்றி செயல்படும் காப்பகங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.