அத்துமீறும் படைவீரர்களைத் தண்டியுங்கள்: உலக நாடுகளுக்கு ஐ.நாவின் அமெரிக்க தூதர் வலியுறுத்தல்
2011 முதல் 2017 வரை, தெற்கு கரோலினாவின் கவர்னராக இருந்தவர் நிம்ரதா நிக்கி ஹேலே. தற்போது அமெரிக்காவின் 29வது ஐ.நா.வின் தூதராக உள்ளார்.
வியாழனன்று ஐக்கிய நாடுகள் சபையில், அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலே (Nikki Haley) ஐ.நா. வின் அமைதியை நிலைநாட்டும் தேவைகளுக்காகப் படைகளை அனுப்பும் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்கள் படைவீரர்கள் பெண்களை மானபங்கம் படுத்துவதையும், பெண்களிடம் அத்துமீறுவதையும் கட்டுப்படுத்த தவறுவதாகவும், இவ்வாறான புகார் அளிக்கப்பட்டாலும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகளும் அரசும் அலட்சியபடுத்துவதையும் சுட்டிக்காட்டினார். அத்தகைய படைவீரர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுப்பு நாடுகளை வலியுறுத்தினார்.
அஸ்ஸோசியேட் பிரஸ் எனும் புலானாய்வுப் பத்திரிக்கை இலங்கையிலிருந்து ஐ.நா. அமைதிப்படை பணிக்காக ஹைத்தி வந்த 134 இலங்கை ராணுவ வீர்கள் 2004 முதல் 2007 வரையிலான காலத்தில் ஒன்பது குழந்தைகளை (ஆண் மற்றும் பெண் குழந்தைகளை) தொடர்ந்து வல்லுறவுக் கொள்ளும் சம்பவங்களை ஆதாரத்துடம் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தச் செய்திகளைக் சுட்டிக்காட்டி பேசிய நிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் பலிகடா ஆக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். நடவடிக்கை எடுக்க மறுத்தால், படைகள் திரும்ப அனுப்பப் படும் அல்லது அவர்களுக்கான நிதி நிறுத்தப் படும் என்றார் கண்டிப்புடன்.
கரீபியன் நாடான ஹைத்தியில் அமைதிப்படை அத்துமீறி வருவது வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து ஐ.நா. பாதுகாப்புச் சபை இந்த வருட அக்டோபரில் அமைதிப்படையை விலக்கிக் கொள்வதென ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. வெறுமையில் உழலும் ஹைத்தியில் தேர்தல் நடைபெற்று ஆட்சி அமைக்கப் பட்டபின்னர் அந்நாடு சகஜ நிலைக்குத் திரும்புவதாக நம்புகின்றது.
ஆனால், ஹைத்தியிலிருந்து ஐ.நா.வின் அமைதிப் படை கறைபடிந்த கரங்களுடனே விடைபெற உள்ளது.
குறிப்பாக நேபாளிலிருந்து ஐ.நா. அமைதிப்படைக்கு ஹத்தி சென்ற வீரர்கள் காலரா நோயைப் பரப்பியதால், கடந்த 2009 முதல் தற்போது வரை 9,500 ஹைத்தி மக்கள் மரணமடைந்தனர். மேலும் பலப் படையினர் அங்குள்ள பெண்களுக்குப் பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளனர். இலங்கை வீரர்கள் குழந்தைகளை உடலுறவிற்காக அடைத்து வைத்துக் கொடுமைபடுத்தியதும் குறிப்பிடத் தக்கது.
ஹைலி, அசோசியேட் பிரஸ் அறிக்கையைச் சுட்டிக் காட்டி “இந்தப் பிஞ்சுக் குழந்தைகளிடம் எந்த முகத்தை வைத்துக் கொண்டு “அமைதிப் படை அமைதியை மட்டுமே நிலைநாட்டியது என்று கூற முடியும்? இந்தப் படையினர் அந்த சிறுமிகளைப் பாதுகாத்தனரா ? எனக் கோபத்துடன் வினவினார்.
இலங்கை அத்தகைய ராணுவ வீர்ர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனினும், இலங்கையை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கு அமைதிப் படை பணிக்கு வீரர்கள் அனுப்புவதை தடுக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
ஹைத்தி குறித்தான வாக்கெடுப்பிற்குப் பின் பேசிய ஹேலி, “அமைதிப்படை வெளியேறுவது வெற்றியாகப் பார்க்கப் பட்டாலும், ஹைத்தி மக்கள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை மறக்கவே முடியாது, இந்தச் சம்பவங்கள் அம்மக்களின் மனதில் ஏற்படுத்திய வடுக்கள் மறையாது.
“ஹைத்தி செக்ஸ் வளைய” விசாரணையில், பனிரெண்டு வயதுடைய ஒன்பது குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியது ஐ.நா. நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஒரு பையன், தம்மிடம் உணவு மற்றும் காசு தருவதாகக் கூறி 100 வீரர்கள் உடலுறவு கொண்ட்தாக்க் கூறினார். தினமும் குறைந்தது நாங்கு படைவீரர்கள் தம்மிடம் வல்லுறவு கொண்டதாகச் சாட்சியம் அளித்துள்ளான்.
இந்தச் சம்பவம் கடந்த 12 வருடங்களில் நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல்களின் இந்தச் சம்பவம் ஒரு சிறிய உதாரணம் தான். இதுவரை 2000க்கும் அதிகமாகப் பாலியல் அத்துமீறல்கள் ஐ.நா வின் அமைதிப்படையினரால் நிகழ்த்தப் பட்டுள்ளதாக அஸ்ஸோசியேட் பிரஸ் எனும் புலானாய்வுப் பத்திரிக்கையின் தரவுகள் தெரிவித்தன.
ஹைத்தியில் பணியில் உள்ள 2370 படைவீரர்கள் படிப்படியாய் அடுத்த ஆறு மாதங்களில் முற்றிலும் வெளியேறுவர் என்று அறிவித்தார்.
புதிய அமைதிக் காக்கும் பணியைத் தொடர ஹைத்தி தேசிய காவல் படையினருக்கு உரிய பயிற்சியளித்து ஹைத்தியில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் மனித உரிமைகளை மேம்படுத்தவும் 1270 பேர் கொண்ட புதிய படை உருவாக்கப் படும்.
ஹைத்தியில் ஜன்நாயக வளர்ச்சி, சுதந்திரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு நில்கிட உறுதிபூண்டுள்ளது” என்றும் ஹேலி கூறினார்.
எனினும், தவறிழைத்த படைவீரர்கள்மீது உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து ஐ.நா. கண்காணிக்கும் என்றும் தெரிவித்தார்.
முன்னாள் ஐ.நா. தலைவர் பான்-கீ-மூன், தவறிழைத்த வீரர்கள் மீது, தவறு நடந்த நாடுகளில் நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் தவறிழைத்த நாடுகளுக்குச் சன்மானத் தொகை நிறுத்திவைக்கப் படும் என்றும் பரிந்துரைத்தார்.
சிலப் பெண்கள், பணத்திற்கும், பரிசுப் பொருட்களுக்கும் ஆசைப்பட்டு, ராணுவ வீரர்களின் உடல் தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர். ஜாக்குலின் நோனோ எனும் பெண் தாம் 17 வயதிலிருந்து இந்தச் செயலில் ஈடுபட்டு தன் இரு குழந்தைகளை வளர்த்ததாகக் கூறியுள்ளார். ஜீன் மேரி பாஸ்கல் எனும் 43-வயதான பெண், தம் இளம் வயதில், அமைதிப் படை ஊருக்குள் நுழைந்த அன்றே தான் அமைதிப் படை வீரர் ஒருவரால் பலாத்காரப் படுத்தப் பட்டதாகக் கூறினார். “ஐ.நா.விற்கு ஹைத்தி ஒரு விளையாட்டு அரங்கமாய் மாறி விட்டது என்றார் வருத்தத்துடன். ஹைத்தியில் 2010ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 லட்சம் மக்கள் இறந்தனர். அதில் ஐ.நா. அமைதிப் படையைச் சேர்ந்த 100 வீரர்களும் அடங்குவர்.