சென்னை:
சென்னை மாங்காட்டில் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார்.
போரூரை அடுத்த மாங்காடு மதனந்தபுரத்தில் உள்ள நிகிதா அடுக்குமாடி குடியிருப்பில் சரளா – சேகர் தம்பதியினர் மற்றும் அவர்களது மகன் ஜஸ்வந்த் ஆகியோர் வசித்து வந்தனர். ஜஸ்வந்த், ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அதே குடியிருப்பில் வசித்த பாபு என்பவரின் மகள் ஹைசினி என்ற ஏழு வயது சிறுமியை பலாத்காரம் செய்தி, எரித்துக்கொன்றார் ஜஸ்வந்த். சிசி டிவி காட்சி மூலம் இது தெரியவந்தது.
இதையடுத்து ஜஸ்வந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ச்சப்பட்டது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வந்தார்.குடும்பத்துடன் குன்றத்தூர் சாய்ராம் சாலை, சம்மந்தம் நகருக்கு குடி பெயர்ந்தனர்.
சிறுமியை பலாத்காரப்படுத்தி கொலை செய்ததன் காரணமாக அவரத வேலை பறிபோனது. வேறு இடங்களிலும் வேலை கிடைக்கவில்லை.
இதனால் செலவுக்கு பணம் இன்றி அடிக்கடி தாயிடம் சண்டையிட்டார். தாயார் சரளா பணம் தர மறுக்கவே, அவரை வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் சரளாவின் தலையைில் சரமாரியாக தாக்கினார். ரத்தவெள்ளத்தில் விழுந்த சரளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகள் என மொத்தம் 25 பவுன் நகைகள், பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு ஜஸ்வந்த் தப்பியோடி விட்டார்.
இந்நிலையில் வேலைக்கு சென்றிருந்த சேகர், மனைவி சரளாவின் செல்போனுக்கு அழைத்துள்ளார். நீண்ட நேரம் போன் அடித்தும் எடுக்காததால் சந்தேகம் அடைந்த சேகர் வீட்டின் அருகில் வசித்து வந்த தனது உறவினர்களிடம் சொல்லி வீட்டில் போய் பார்க்கச் சொல்லியுள்ளார். அப்போதுதான் சரளா வீட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சேகர் வீட்டுக்கு விரைந்து வந்தார். மனைவியின் உடலை பார்த்து கதறியழுத அவர் இது குறித்து குன்றத்துார் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சேகரின் மகன் ஜஸ்வந்த், நகைக்காக தாயை அடித்துக் கொலை செய்து விட்டு நகைகளுடன் தப்பியோடியது தெரியவந்தது. ஜஸ்வந்தை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.