இந்தியாவில் 36 இல் 1 எனக் காணப்படும் குழந்தைகள் இறப்பு விகிதம்

Must read

டில்லி

ந்திய நாட்டில் பிறக்கும் 36 குழந்தைகளில் ஒரு குழந்தை ஓராண்டுகளுக்குள் இறந்து விடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிக அளவில் இருந்து வருகிறது.  இந்தியாவில் பிறக்கும் 36 குழந்தைகளில் ஒரு குழந்தை தனது முதலாம் வயதுக்குள்ளேயே இறந்து விடுவதாக தகவல் வந்துள்ளது.  ஒரு இந்தியப் பதிவாளர் வெளியிட்ட புதிய அறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில், “கடந்த 2020இல் ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளில் 28 குழந்தைகள் ஒரே ஆண்டுக்குள் இறந்து விட்டன. 1971ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 129ஆக இருந்தது. அதற்கு முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் தற்போது பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவு.

குறிப்பாகக் கடந்த 10 ஆண்டுகளில் 36 சதவீத உயிரிழப்புகள் குறைந்துள்ளன ஆயினும் இன்னும் முழுமையாகக் குழந்தைகள் உயிரிழப்புகள் முடிவுக்கு வரவில்லை. இதில் ஊரகப் பகுதிகளில் பச்சிளங் குழந்தைகளின் இறப்பு விகிதம் 48 இல் இருந்து 31ஆகவும், நகர்ப்புறங்களில் 29 இல் 19-ஆகவும் குறைந்துள்ளது.

நடப்பாண்டு 2020இல் அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 43 பச்சிளங் குழந்தைகளும், குறைந்தபட்சமாக மிஸோரமில் 3 பச்சிளங் குழந்தைகளும் உயிரிழந்துள்ளன. குழந்தைகள்  பிறப்பு விகிதத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த 2020இல் 19.5 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால் 1971இல் 36.9 சதவீதமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article