புதுச்சேரி

ரிக்கமேடு பகுதியில் மீண்டும் அகழாய்வு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி புதுச்சேரிக்கு வந்துள்ளார்.  அவர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கு பெற்றார். முடிவில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.  சந்திப்பின் போது புதுச்சேரி மாநில அமைச்சர் சாய் ஜெ.சரவணன்குமார், எம்பி செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்

அப்போது அமைச்சர், “மத்திய அரசு புதுச்சேரி அரிக்கமேடு தொல்லியல் தளங்களை மீண்டும் அகழாய்வு செய்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும். இந்த அரிக்கமேடானது, நாட்டின் தொல்பொருள் முக்கியத்தும் வாய்ந்த பகுதியாக உள்ளது.  இந்த புராதன தளமான பகுதி நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டது வேதனையளிக்கிறது.

இங்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் இங்கு தொடங்கிய அகழ்வராய்சிப் பணி, பிறகு வந்த அரசால் தொடரப்படாமல், பராமரிப்பின்றி கிடக்கிறது.அந்த மேம்பாட்டுப்பணிகளை இந்திய தொல்லியல் துறை அங்கு, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

பாரம்பரிய, வரலாற்றுப்பூர்வமான சுற்றுப்பகுதியாகப் புதுச்சேரி நகரம் உள்ளதால், அதனைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மக்கள் அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவருமே தூய்மைப் பணியை கடைப்பிடிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.