மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று மீண்டும் ஆலோசனை!

Must read

சென்னை: தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் இன்று மீண்டும் மாவட்டச் செயலாளர் களுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், கொரோனா  மற்றும் வடகிழக்கு பருவமழை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுப்பட்டு வருகிறது. சென்னையில் பாதிப்பு குறைந்தாலும், மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையும் அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், தமிழக தலைமைச்செயலாளர் சண்முகம் காணொளி காட்சி மூலம் இன்று பிற்பகல்  அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

காணொளி காட்சி மூலம்  நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில்,  வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை,  குளம் குட்டைகள் தூர்வார வேண்டிய பணிகள், தாழ்வான பகுதியில் நீர் தேங்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும்,  அதிக மழை பெய்யும் மாவட்டங்களை கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

More articles

Latest article