சென்னை: தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாக அனைத்துத்துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. மற்றும் மாநில கோரிக்கை விவாதத்தின்போதும், துரை ரீதியிலான ஏராளமான மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும், ஏற்கனவேதொடங்கப்ப்டட திட்டங்களின் நிலை என்ன, மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, புதிய திட்டங்களை செயல்படுத்துவது, அதற்கான நிதி ஒதுக்கீடு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், தலைமைச்செயலாளர் இறையன்பு அனைத்துத்துறை செயலாளர்களுடன் தலைமைச்செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன்,பேரவைச் செயலாளர் சீனிவாசன்,உள்துறைச் செயலாளர் பிராபகர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.