சென்னை: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா 3 கட்டங்களை பல மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று கடைசி கட்டமாக சில மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். அத்துடன் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை நிறைவுபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராநாதபுரம், விருதுநகர், தேனி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ்மீதான 4 நாட்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 11, 13, 15, 19 ஆகிய தேதிகளில் பகுதி பகுதியாக ஆட்சியர்களுடன் 19 துறைகளின் முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி ஏற்கனவே மூன்று கட்டமாக பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இன்று இறுதிக்கட்டமாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராநாதபுரம், விருதுநகா், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்களுன் ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது.
அரசின் திட்டங்கள் குறித்து தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுடன் 4 நாட்கள் ஆலோசனை….