சென்னை: கொரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள் உள்பட 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு வரும் 15ந்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் பதக்கம் வழங்கி கவுரவிப்பார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 பேருக்கு முதலமைச்சரின் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க முன்களப் பணியாளர்களாக பணியாற்றிய மருத்துவ துறையை சேர்ந்த 9 பேருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது.
டாக்டர்கள் ராஜேந்திரன், உமா மகேஸ்வரி, சதீஷ்குமாருக்கு பதக்கம் வழங்கப்படுகிறது. செவிலியர்கள் ராமுத்தாய், கிரேஸ் எமைமா, சுகாதார துணை இயக்குனர் எஸ்.ராஜூ, சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார், ஆய்வக பணியாளர் ஜீவராஜ் ஆகியோருக்கும் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்பலருக்கு பதக்கங்கள்அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பதக்கம் வரும் 15ந்தேதி சுதந்திர தின விழாவின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி கவுரவிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.