சென்னை: தமிழக மாணவர்களை விரைந்து மீட்க வேண்டும் என மத்தியஅமைச்சர் ஜெயசங்கரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் வேண்டுகோள் விடுத்தார்.
உக்ரைன் மீது ரஷ்யா 5 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனில் சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதற்காக சிறப்பு விமானங்களை அனுப்பி மீட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது,, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக மாணவர்களுக்கு உணவு, இருப்பிடம், பாதுகாப்பு போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும் என்றும் என்று கூறியதுடன், அதற்காக தனி அலுவலரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.