சென்னை; 2026 ஜனவரி 5ந்தேதி மாணவ மாணவிகளுக்கு  இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும், இதையடுத்து  மாநிலம் முழுவதுழம் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என  உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.

ஏற்கனவே டிசம்பர் 19ந்தேதி இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்  தொடங்கி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், தற்போது ஜனவரி 5ந்தேதி என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 திமுக ஆட்சி அமைந்த கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களில், 98.23% ரேஷன் அட்டைகள் விநியோகிக்கப் பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025 டிசம்பர் வரை 32,61,153 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 21,09,629 ரேஷன் அட்டைகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மீதமுள்ள விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

மேலும்,  நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் நலனை கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டு ”எல்லோருக்கும் எல்லாம்” என்ற உன்னத நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தமிழ்நாடு அரசின் மூலம் கல்வி மேம்பாட்டிற்காக பள்ளிக்கல்வித்துறைக்கு ஆண்டுதோறும் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து வருகிறார்கள்.

முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தி னார்கள். தொடர்ந்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்.

மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ளார்கள். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 51 ஆயிரம் பயனாளிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து 1 இலட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் அவர்களால், தென்காசியில் 29.10.2025-அன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, தமிழ்நாட்டில் இதுவரை 21.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 3,200 முழுநேர, பகுதிநேர மற்றும் நகரும் நியாய விலைக்கடைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

படித்த இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

முதலமைச்சர் அவர்கள் வருகின்ற 05.01.2026-அன்று 10 இலட்சம் மாணவ, மாணவியர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழாவினை தொடங்கி வைக்க உள்ளார்கள். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் .

இவ்வாறு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

டிசம்பர் 19ந்தேதி மாணாக்கர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

[youtube-feed feed=1]