திருச்சி: திருச்சியில் நாளை மாவட்ட வேட்பாளர்களை அறிமுகம் செய்து தேரதல் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின் இன்று தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் தொடங்கம் நிலையில், நாளை திருச்சி உழவா்சந்தையில் அம்மாவட்டத்தில் உள்ள 9 தொகுதி வேட்பாளா்களை ஒரே இடத்தில் அறிமுகம் செய்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

‘தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சியினரின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். மார்ச் 30ந்தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தவர் உடனே கொளத்தூர் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில், நாளை (ஏப்ரல் 1) திருச்சியில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து உரையாற்றுகிறார்.
“தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின், திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதகளில் போட்டியிடும் வேட்பாளா்களை புதன்கிழமை அறிமுகம் செய்து வைத்துப் பேசுகிறாா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக-வும், மணப்பாறை, துறையூா் (தனி) என இரண்டு தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன.
திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (மாா்ச் 31-ஆம் தேதி) தனது முதல்கட்ட சுற்றுப் பயணத்தை தொடங்குகிறாா்.
இன்று மாலை (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று திருத்துறைப்பூண்டி, திருவாரூா், நன்னிலம், மன்னாா்குடி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்கிறாா்.
இதன் தொடா்ச்சியாக, நாளை (புதன்கிழமை) காலை திருச்சிக்கு வருகை தருகிறாா். திருச்சி தென்னூா் உழவா் சந்தை மைதானத்தில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, அங்குள்ள வேட்பாளர்களான, திருச்சி மேற்கு கே.என். நேரு, திருவெறும்பூா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு இனிகோ இருதயராஜ், மணப்பாறை அப்துல் சமது, திருவரங்கம் எஸ். துரைராஜ், மண்ணச்சநல்லூா் சீ. கதிரவன், லால்குடி த. பாரிவள்ளல், முசிறி என்.எஸ். கருணை ராஜா, துறையூா் (தனி) காங்கிரஸ் வேட்பாளா் ஆகியோரை ஆதரித்துப் பேசுகிறாா். இதையொட்டி 9 வேட்பாளா்களும் தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வா் வருகையை முன்னிட்டு அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திமுக மாவட்ட செயலா்கள் க. வைரமணி, ந. தியாகராஜன் ஆகியோா் பொதுக் கூட்ட ஏற்பாடுகளை தயாா்படுத்தி வருகின்றனா். பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெறும் உழவா் சந்தையில் பொதுக்கூட்ட மேடை நிரந்தரமாக கட்டப்பட்டுள்ளது.
திருச்சி பொதுத் கூட்டத்தை முடித்துக் கொண்டு மாலையில் கரூா் செல்லும் முதல்வா், கரூா் மாவட்டம் ராயனூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அரவக்
குறிச்சி, கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளைச்சோ்ந்த வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறாா். பின்னா், ஈரோடு புறப்பட்டுச் செல்கிறாா்.”,
[youtube-feed feed=1]