சென்னை: வைகோவின் போதைப்பொருள் ஒழிப்பு நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து உள்ளார். இந்த நடைபயம் திமுகவுக்கு எதிரானது என விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது சமத்துவ நடைபயணம் என மாற்றி உள்ளார்.

மதிமுக சார்பில் ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் சமத்துவ நடைபயணத்தை திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பான கொடியை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ம திமுக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு, சாதி மோதல் தடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்னுடைய தலைமையிலான சமத்துவ நடைபயணம், 2026 ஜன.2-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை 11 நாட்களுக்கு நடைபெறுகிறது. அதன்படி 190 கி.மீ. வரை நடைபெறும் நடைபயணத்தை, திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக இந்துக்கள் வழிபடும் கோயில், கிறிஸ்தவர்கள் வழிபடும் தேவாலயம், இஸ்லாமியர்கள் வழிபடும் மசூதி, சீக்கியர்கள் வழிபடும் குருத்வாராக்கள் அடங்கிய சின்னங்கள் பொருந்திய கொடி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சிவப்பு, மஞ்சள் நிற கொடியை முதல்வர் எனக்கு வழங்க உள்ளார் என்றார்.
தொடர்ந்து பேசியவர், தனது நடைபயண நிகழ்ச்சி தொடக்க விழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
தனது போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சமத்துவ நடைபயணத்துக்காக மதிமுக தொண்டரணி, இளைஞரணி, மாணவரணியில் இருந்து ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகரித்துள்ள போதைபொருள் நடமாட்டம்: திமுக அரசுக்கு எதிராக வைகோ 10 நாள் நடைபயணம் அறிவிப்பு!
[youtube-feed feed=1]