சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 89 பேருக்கு பணி நியமன ஆணை, திரைப்பட பயிற்சி கல்லூரி தளம் திறப்பு, பள்ளிகல்வித்துறை கட்டிங்கள் திறந்து வைத்தார்..

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.
அதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மூலம் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து, உயர்கல்வித் துறை சார்பில் 51 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இதையடுத்து, தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி கல்லூரியில் ஏ.சி. வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மூலம் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் தேர்வானர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி கல்லூரியில் ஏ.சி. வசதியுடன் கூடிய படப்பிடிப்பு தளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.174 கோடியில் 19 புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை முதல்வர், தலைமை செயலகத்தில் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
ரூ.51 கோடியில் கல்விசார் கட்டடங்களையும் இன்று திறந்து வைத்தார். நெல்லை மானூர் அரசு கலை, அறிவியல் கல்லூரி கட்டடம் ,வால்பாறையில் சிங்காரவேலர் ஓய்வு இல்லமும் திறந்து வைக்கப்பட்டது.
[youtube-feed feed=1]