சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது தொகுதியான கொளத்தூர் தொகுதியில்,  248 புதிய பேருந்துகள், புணரமைக்கப்பட்ட திரு.வி.நகர் பேருந்து நிலையம், பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடம், சிறுவிளையாட்டு அரங்கம், மற்றும்  அடுக்குமாடி குடியிருப்புகளை தொடங்கி வைத்தார் .

வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின்” கீழ் இன்று  முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில்  திறந்து வைத்த முதல்வர்/

கொளத்தூர்  திரு.வி.க.ர் பகுதியில்,  நவீனமயமாக்கப்பட்ட  பேருந்து நிலையத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து,   பெரியார் நகர் பேருந்து பணிமனையில்,  ரூ. 104.43 கோடியில் புதிய 248 BS-VI மகளிர் விடியல் பயண பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அத்துடன்,  கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ளசிறு விளையாட்டரங்கு,   பெண்களுக்கான அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.  இந்த சிறு விளையாட்டு அரங்கு,   கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில்  அமைக்கப்பட்டுஉ ள்ளது.  விளையாட்டரங்கை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.7.50 கோடியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்து, பயனர்களிடம் குடியிருப்புகளுக்கான ஆணைகளை வழங்கினார்.