சென்னை: முதலமைச்சர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்த வெளிநடப்பு செய்த அதிமுக, முதல்வர்  ஸ்டாலின் மக்களை ஏமாற்றவே மாநில சுயாட்சி குறித்து பேசுகிறார் என விமர்சித்துள்ளார். அதுபோல பாஜகவும் முதல்வரின் தீர்மானம் தேர்தலுக்கான அரசியல் என விமர்சித்துள்ளது.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விதி 11ன்கீழ் மாநில சுயாட்சி தொடர்பாக உரையாற்றினார். அப்போது,   மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும் என்றார். இதனையடுத்து, மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதையடுத்து,   மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

இந்த தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார்,  திமுக அரசு மீது,  கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார்.

நாங்கள் அவையில் பேச முயற்சித்தால், எங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று கூறியவர், திமுக அரசுக்கு  மாநில சுயாட்சி குறித்து திடீர் ஞானோதயம் வந்துள்ளதால் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.  இந்த அரசு மீது கோபத்தில் இருக்கும் தமிழக மக்களை மடைமாற்றம் செய்யவே மாநில சுயாட்சி குறித்து முதலமைச்சர் பேசியுள்ளார். மத்தியில் ஆளும் அரசுடன் கூட்டணியில் இருந்தபோது பேசியிருந்தால் மக்கள் நம்புவார்கள், இதுமுழுவதும் ஏமாற்று வேலை .

இவ்வாறு விமர்சித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுடன் பேசிய பாஜக எம்எல்ஏ  நயினார் நாகேந்திரன்,  சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மாநிலங்களுக்கான அதிகாரம் பற்றிய 110-வது விதி அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. வெளிநடப்பு செய்தது என கூறிய பா.ஜ.க. சட்டசபை கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், “தனி நாடு கோருவது போல தி.மு.க. பிரிவினைவாதம் பேசி கொண்டிருக்கிறது. தேர்தலுக்காக இது போன்று மத்திய அரசுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டு வருகிறார்கள்.

வருகிற சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இனியும் அது போன்று தான் செய்வார்கள். இதனால் தி.மு.க. இனி ஆட்சிக்கு வர முடியாது” என்றார்.

பின்னர் அவரிடம், நீங்கள் மாநில தலைவராகி இருப்பதால் பா.ஜ.க. சட்டசபை தலைவராக வேறு ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், ஒருவரிடம் பதவிகள் இல்லாமல் பிரித்து கொடுக்கப்பட்டால் நல்லது தானே” என்றார்.