சென்னை;  சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

தமிழக சட்டப்பேரவையின் 2023ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் நான்காவது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தொடரின்போது, கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத்தொடர்ந்து, சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக்கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானமாக கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,   “தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேதுசமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது. 1860-ஆம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் Commander Taylor என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் டாக்டர் ஏ. இராமசாமி முதலியார் குழு.

1963-இல் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட டாக்டர் நாகேந்திரசிங் ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக்குழு – ஆகிய பொறியியல் வல்லுநர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டம் ஆகும்.

1967ல் ஆட்சிக்கு வந்த அண்ணா சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார்.

இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது பிரதமராக இருந்த மாண்புமிகு அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் “Feasibility Study”-க்கு அனுமதியளித்தார்கள். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது.

பின்னர் ஒன்றியத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. 2004ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்தியஅரசு அமைந்தபோது திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டது.

ரூ.2,427 கோடியில் தொடக்கப்பட்ட சேது சமுத்திரம் திட்டம் அரசியல் காரணங்களால், பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அதன் பயன்கள் கிடைக்கவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த வாஜ்பாயி சாத்தியக் கூறு ஆய்வுகளுக்கு அனுமதி அளித்தார். ஆனால், அரசியல் காரணங்களுக்காக பாஜக இந்த திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் இருப்பது எந்த மாதிரியான கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் என்றும் ஸ்டாலின் கூறினார்.

அரசியல் காரணமாக, சேதுசமுத்திரம் திட்டத்துக்கு பாஜக அரசு முட்டுக்கட்டை போது.

ஆரம்பத்தில் இந்த திட்டத்தை ஆதரித்த ஜெயலலிதா, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படாததற்கான அரசியல் காணரங்களை சொல்ல விரும்பவில்லை,.

சேது சமுத்திரம் திட்டத்தை நிறைவேற்றினால், 50ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் பாஜக ஆர்வம் காட்டவில்லை. மாற்றுபாதையையும் கண்டறியவில்லை.

சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் துறைமுகங்களும் வளர்ச்சியடையும். சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றவில்லையெனில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.

சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பது தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாக தமிழக அரசு எண்ணுகிறது என்றும்,  இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழகஅரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று கூறினார்.