சென்னை அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்… வீடியோ

Must read

சென்னை:  அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பணியாளர்களிடம் பொதுமக்கள் புகார் குறித்து விசாரித்தார். 10 இலட்சமாவது நுகர்வோருடன் அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி கேட்டறிந்தார்.

தமிழக முதலமைச்சர் இன்று காலை தனது முக்கிய பணிகளுக்கு மத்தியில், சென்னை அண்ணாசாலையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பணியில் இருந்தவர்களிடம், மின்வாரிய புகார்கள் குறித்து கேட்டறிந்ததுடன், அவரே இருக்கையில் அமர்ந்து,  மின்வாரிய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் மக்களிடம் முதலமைச்சர் குறைகளை கேட்டறிந்தார்.

More articles

Latest article