சென்னை:  பொதுப்பணித் துறை பொறியாளர்களின் பயன்பாட்டுக்கு 2.38 கோடி மதிப்பிலான 22 வாகனங்கள்! முதலமைச்சர் வழங்கினார்.

தமிழக சட்டப்பேரவை மானிய கோரிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில்,  பொதுப்பணித்துறை பொறியாளர்களின் பயன்பாட்டுக்கு வாங்கப்பட்ட  22 வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

இந்த வாகனங்கள் பொதுப்பணித் துறையின், தலைமைக் கட்டட கலைஞர் மற்றும் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக ₹2.38 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளது.  அதன்படி,  7 சீருந்துகள் மற்றும் 22 ஜீப்புகளை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.