சென்னை: நாட்டின் 76வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையில் நடைபெற்ற குடியரசு தினம் விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் விருது வழங்கி பாராட்டினார்.

சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் ஆகிய பதக்கங்களையும், கோப்பைகளையும் பெற்றவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே ஆளுநர் ரவி நேற்று (ஜனவரி 26) தேசியக்கொடியை ஏற்றினார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தார். அதன்படி

வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் சென்னையைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் வெற்றிவேலுக்கு வழங்கப்பட்டது

. ராமநாதபுரத்தைச் சேர்ந்த அமீர் அம்சாவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கமும்,

நாராயணசாமி நெல் உற்பத்தி திறன் விருது தேனியைச் சேர்ந்த விவசாயி முருகவேலுக்கும் வழங்கப்பட்டது.

விழுப்புரம் சட்டம் ஒழுங்கு தலைமை காவலர் மகாமார்க்ஸ், விழுப்புரம் காவல் ஆய்வாளர் சின்னகாமணன், துறையூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் கார்த்தி, ஆயுதப்படை காவலர்கள் சிவா, பூமாலை ஆகியோருக்கு காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டது.

சிறந்த காவல் நிலையத்திற்கான முதல் பரிசு மதுரை மாவட்டத்திற்கும், இரண்டாம் பரிசு திருப்பூர், மூன்றாம் பரிசு திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழங்கி ஸ்டாலின் சிறப்பித்தார்.