சென்னை: ரூ.18.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் விடுதிக் கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், ரூ. 18.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையக் கட்டடங்கள், விடுதிக் கட்டடங்கள், மண்டல இணை இயக்குநர் (பயிற்சி) அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை காணொளி காட்சி வாயிலாக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன்படி,  சென்னை அம்பத்தூர், தர்மபுரி, ஈரோடு, திருவாரூரில்  அரசு ஐடிஐ-க்கு ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள  தொழில் பயிற்சி நிலைய புதிய கட்டிடங்கள்,  மண்டல இணை இயக்குனர் அலுவலக கட்டடங்கள், விடுதி கட்டிடங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

[youtube-feed feed=1]