சென்னை: முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில், சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் முதல்முறையாக சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தைத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த தடுப்பூசிக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.28 ஆயிரம் வரை செலவாகும் நிலையில், அரசு சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட 3.38 லட்சம் சிறுமிகளுக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் முதல்கட்டமாக 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி (HPV தடுப்பூசி) என்பது மனித பாப்பிலோமா வைரஸ் தொற்றைத் தடுத்து, கருப்பை வாய் புற்றுநோயை 90% வரை தடுக்கும் ஒரு முக்கிய தடுப்பூசி.
இந்த தடுப்பூசி 9 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுமி மற்றும் சிறுவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பாலியல் செயல்பாட்டிற்கு முன் இந்தத் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது சிறந்த பாதுகாப்பை வழங்கும், இது 6 மாத இடைவெளியில் 2 அல்லது 3 டோஸ்களாக செலுத்தப்படுகிறது.
முக்கிய அம்சங்கள்:
இது கருப்பை வாய் புற்றுநோய் மட்டுமின்றி, பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் HPV வைரஸால் ஏற்படும் பிற புற்றுநோய்களையும் தடுக்கிறது.
பொருத்தமான வயது: பொதுவாக 9-14 வயது சிறுமிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் 26 வயது வரை உள்ளவர்களும் இதைப் போட்டுக்கொள்ளலாம்.
டோஸ் முறை:
9-14 வயது: 2 டோஸ்கள் (0 மற்றும் 6-12 மாதங்கள்).
15 வயதிற்கு மேல்: 3 டோஸ்கள் (0, 1-2, 6 மாதங்கள்).
வகைகள்: Gardasil, Gardasil 9, மற்றும் Cervarix ஆகியவை முக்கிய HPV தடுப்பூசிகள்.
பக்க விளைவுகள்: மிகவும் குறைவு. ஊசி போட்ட இடத்தில் வலி, வீக்கம், லேசான காய்ச்சல் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படலாம்.
பாதுகாப்பு: இந்த தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் உயிருள்ள வைரஸைக் கொண்டிருக்கவில்லை.
தடுப்பூசி போட்டிருந்தாலும், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை (Pap smear or HPV test) வழக்கமாகச் செய்து கொள்வது அவசியம்.
நாளை தொடங்குகிறது இலவச கர்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி… அமைச்சர் மா.சு. தகவல்…