சென்னை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவி: தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து காணொளி காட்சி மூலம் சோளிங்கர் நரசிம்ம கோயிலில் ரோப்கார் சேவையை தொடங்கி வைத்தார்.
சென்னை முகாம் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு,. அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் கடனுதவி மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை தொழிலதிபர்களாக மாற்றுவது குறித்து அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான கடன் உதவிகளை முதலமைச்சர் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கினார்.
ஆதிதிராவிட மக்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் அவர்களின் மொத்த திட்ட தொகையில் 35 சதவீத தொகையானது மானியமாக வழங்கப்படுகிறது. அதன் படி இன்றைய தினம் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழிவு நீர் அகற்றும் ஊர்திக்காக மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு கடலுதவிக்கான ஆணையை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 213 பேருக்கு ரூ.61 கோடி மானியத்துடன் ரூ.129 கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சோளிங்கர் நரசிம்ம கோயிலில் ரோப்கார் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து பணிகள் நடைபெற்று வந்த சோளிங்கர் ரோப்கார் திட்டப்பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. அதையும், அத்துடன், ரூ.11 கோடியில் உட்கட்டமைப்பு பணிகளையும் இன்று சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இதன்முலம் பக்தர்கள் 1305 படிகள் ஏறி சாமி தரிசனம் செய்யும் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.