சென்னை: பதிவு பெற்ற 50 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை இலவச திறன் பயிற்சிiயை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சயில்,  தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 100 பயனாளிகளுக்கு ரூ.1.32 கோடி கடனுதவியை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்  அதிகாரிகள் மற்றும்ப யனர்கள் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில், தமிழ்நாடு  கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சி மற்றும் 50 தொழிலாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியை  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.