சென்னை : முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று காலை, சென்ட்ரல் கோபுரம் கட்டிட கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் மேயர் பிரியா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே சென்ட்ரல் ஸ்கொயர் சென்னை மெட்ரோ நிறுவனம் சார்பில் ரூ.400 கோடியில் கட்டப்பட்டு ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை சென்ட்ரல் பகுதியில் ரூ.350 கோடி மதிப்பீட்டில் சென்ட்ரல் கோபுரம் அமைக்க தமிழ்நாடு அரசுடன் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து விரைவில் சென்டரல் கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை சென்ட்ரல் கோபுரக் கட்டிடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்
சென்ட்ரல் கோபுரக் கட்டடம் 4 அடித்தளம், தரைதளம், 27 அடுக்குமாடியுடன் ரூ.350 கோடியில் கட்டப்பட உள்ளது. இது சென்னை சென்ட்ரல் பகுதியிலுள்ள மத்திய சதுக்க வளாகத்தில் அமைய உள்ளது.