சென்னை: நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் 384 குடியிருப்புகளை திறந்து வைத்தார் மற்றும் 647 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90கோடி செலவில் 8 மாவட்டங்களில் 15 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4644 அடுக்குமாடி குடியிருப்பு களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 2 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவி மற்றும் ஆணையினை வழங்கினார்

அதன்படி,சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நகர்ப்புற வாழ்விட மேம்பட்டு வாரியம் சார்பில் காணொளி வாயிலாக புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட பாஸ் நகரில் 384 குடியிருப்புகளை முதல்வர் திறந்து வைத்தார்.  மேலும், இந்த நிகழ்வின்போது மொத்தம் 647 பயனாளிகளுக்கு முதலமைச்சர் ஆணைகளை வழங்கினார்.