சென்னை:
சென்னையில் உள்ள பிரபல ஸ்கேன் சென்டரில் 2வது நாளாக இன்றும் வரித்துறையினர் சோதனை தொடர்ந்து வருகிறது.

சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் காலை முதலே வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்ட கிளை அலுவலகத்திலும் சோதனை நடைபெறுகிறது. மேலும், வெளிமாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் ஆர்த்தி ஸ்கேன் சென்டர்கள் மற்றும் மருத்துவர்களின் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வரி ஏய்ப்பின் புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. தொடர்ச்சியாக முறையாக வருமான வரி செலுத்தாததால் ஏற்பட்ட வரி ஏய்வு புகாரை அடுத்து இந்த சோதனை நேற்று காலை முதலே நடைபெற்று வருகிறது.