சென்னை: சென்னை அடையாறு காந்தி மண்டப வளாகத்தில், சுதந்திர போராட்ட தியாகிகளான மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் சிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்த வைத்தார்.
ரூ.95 லட்சத்தில் கிண்டி காந்தி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச் சிலைகள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மருதுபாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகள், வ.உ.சிதம்பரனார் கோவை சிறையில் இழுத்த பொலிவூட்டப்பட்ட செக்கு, வ.உ.சி.யின் மார்பளவு சிலைகள் நிறுவப்பட்டு உள்ளது. இந்த நிலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நீர்வளத் துறை தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் திரு.வி.கே.பழனிசாமி கவுண்டர், பாரதரத்னா சி. சுப்பிரமணியம், பொள்ளாச்சி திரு.நா.மகாலிங்கம் ஆகியோருக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் நினைவரங்கம் & திருவுருவச்சிலைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சி காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.