சென்னை: சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் அமையும் சுற்றுச்சூழல் பூங்காவுக்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்   இன்று  தொடங்கி வைத்தார். இதை எதிர்த்து  தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று அங்கு பூங்கா அமைப்பதற்கான பணிகள் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

குத்தகை பாக்கியாக பல கோடிகள் செலுத்தாததால், கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தை தமிழ்நாடு அரசு கையப்படுத்தியது. அதன்படி, அங்குள்ள  118 ஏக்கர் இடத்தில் பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டடது.  இதுகுறித்த, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், ‘வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்’ என, மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.  யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமைப் பூங்கா அமைப்பதற்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனையடுத்து, தீர்ப்பாய உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தனி நீதிபதி  அங்கு பணிகள் மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தார்.

இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு,  பொதுநலன் கருதி தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசின் திட்டங்களான மழைநீர் சேமிப்பு குளங்கள் அமைப்பது போன்றவற்றைத் தொடரலாம் என்று  அனுமதி வழங்கியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட மறுத்து, மனுவை தள்ளுபடி செய்ததால். இதனால் கிண்டி கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் அரசின் திட்டங்களான மழைநீர் சேமிப்பு குளங்கள் அமைக்கும் நடவடிக்கைக்கு தடங்கல் நீங்கியது.

இதையடுத்து, இன்று முதல்வர் ஸ்டாலின், அந்த இடத்தை ஆய்வு செய்ததுடன், அங்கு பணிகளை தொடங்கி வைத்தார்.

கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது .